குழந்தையின் உடலை தேடி கண்டுபிடித்த நாயை தத்தெடுத்த போலீஸ் அதிகாரி

சமீபத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி அருகிலுள்ள ராஜமலை என்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் படுகாயம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஒரு நாய் ஈடுபட்டது. அந்த நாயின் உதவியால் தான் ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த நாயை வளர்த்து
 

குழந்தையின் உடலை தேடி கண்டுபிடித்த நாயை தத்தெடுத்த போலீஸ் அதிகாரி

சமீபத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி அருகிலுள்ள ராஜமலை என்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் படுகாயம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஒரு நாய் ஈடுபட்டது. அந்த நாயின் உதவியால் தான் ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நாயை வளர்த்து வந்த அனைவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த நாயை தத்தெடுக்க இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் விருப்பப்பட்டார். அவருக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது

குழந்தையின் உடலை தேடி கண்டுபிடித்து மட்டுமன்றி அந்த விபத்தில் பலியான பலரது உடலையும் இந்த நாய் தேடி கண்டுபிடிக்க உதவி செய்ததை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் அந்த நாயை தடுத்ததாக அந்த காவல்துறை அதிகாரி முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web