திருந்தி வந்த நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீஸார்!

 

வடமாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. நக்சலைட்டுகளை பிடித்து தண்டனை வழங்குவதை விட அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து திருந்த செய்வதில் போலீசார் மிகுந்த ஈடுபாடு கொண்டு வருகின்றனர் 

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா என்ற பகுதியில் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த நக்சலைட்டுகள் போலீசாரின் அறிவுரையை ஏற்று ஆயுதப் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போலீசில் சரணடைந்த நக்சலைட்டுகள் 15 பேருக்கு திருமணம் செய்து வைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்தனர் 

naxallite marriage

இதனையடுத்து நேற்று காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி ஆயுத போராட்டத்தை கைவிட்டு சரணடைந்த 15 நக்சலைட்டுகள் போலீசாரே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் மிக சிறப்புடன் ஆட்டம் பாட்டத்துடன் நடந்தது என்பதும் இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காட்டுப்பகுதியில் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த நக்சலைட்டுகளுக்கு திருந்தியவுடன் திருமணம் செய்தால் இயல்பான வாழ்க்கையை தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

From around the web