புறப்பட்ட ரெயில் பின்னால் ஓடிச்சென்று குழந்தைக்கு பால் பாக்கெட் வழங்கிய போலீஸ் இந்தர் சிங்…

பசியால் தவித்த குழந்தைக்கு கடையில் பால் வாங்கி, புறப்பட்ட ரயிலின் பின்னால் ஓடிச்சென்று கொடுத்த போலீசின் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணம், சைக்கிள் பயணம் எனப் பலவகையாகப் பயணம்செய்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பசி, பட்டினி எனக் குழந்தைகள் முதல் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பயணம் செய்வதும், உயிர் இழப்பு ஏற்படுவதும் என சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது கர்நாடகாவின் பெல்காம்- கோரக்பூர் செல்லும் ரெயிலில் ஷரிஃப்
 
புறப்பட்ட ரெயில் பின்னால் ஓடிச்சென்று குழந்தைக்கு பால் பாக்கெட் வழங்கிய போலீஸ் இந்தர் சிங்…

பசியால் தவித்த குழந்தைக்கு கடையில் பால் வாங்கி, புறப்பட்ட ரயிலின் பின்னால் ஓடிச்சென்று கொடுத்த போலீசின் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணம், சைக்கிள் பயணம் எனப் பலவகையாகப் பயணம்செய்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

பசி, பட்டினி எனக் குழந்தைகள் முதல் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பயணம் செய்வதும், உயிர் இழப்பு ஏற்படுவதும் என சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

புறப்பட்ட ரெயில் பின்னால் ஓடிச்சென்று குழந்தைக்கு பால் பாக்கெட் வழங்கிய போலீஸ் இந்தர் சிங்…

அதாவது கர்நாடகாவின் பெல்காம்- கோரக்பூர் செல்லும் ரெயிலில் ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் மற்றும் 4 மாத குழந்தையுடன் பயணம் செய்தபோது, குழந்தை பசியால் அழுதவண்ணமே இருந்துள்ளது. பல ரெயில் நிலையங்களில் முயற்சித்தும் பால் கிடைக்காததால் போபால் ரெயில் நிலைய ஆர்பிஎஃப் போலீஸ் இந்தர் சிங் யாதவிடம் இதுகுறித்து குழந்தையின் தாய் கூறியுள்ளார்.

உடனே ஓடிச் சென்று ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள கடையில் இருந்து பால் வந்தநிலையில் ரயில் புறப்பட, அவர் படுவேகமாக ஓடி பால் பாக்கெட்டை கொடுக்க, குழந்தையின் தாய்- தந்தை அழுதவாறே நன்றி தெரிவித்தனர்.

இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்தர் சிங்கிற்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார், மேலும் சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

From around the web