ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி-விவசாயிகள் பலத்த காயம்!

ஹரியான மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
farmers

தற்போது இந்தியாவில் பெரும் துன்பத்தை அடைந்து வருகிறவர்கள் யார் என்றால் விவசாயிகள் தான். விவசாயிகள் நாளுக்கு நாள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் அவர்களுக்கு பெரும் துன்பத்தை கொடுக்கிறது இந்த நிலையில்  அவ்வப்போது விவசாயிகள் பல பகுதிகளில் தாக்கப்பட்டு வருகின்றனர், இது மிகுந்த வேதனை அளிக்கிறது.farmers

இதன் தொடர்ச்சியாக தற்போது ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. அந்தப்படி கல்கா  நெடுஞ்சாலையில் சூரஜ்ப்பூர்  சுங்கச்சாவடியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மேலும் போலீசார் தடியடி நடத்தியதால் ஏராளமான விவசாயிகள் பலத்த காயமடைந்தனர்.

மேலும் போலீசார் தடியடியில் காயமுற்ற விவசாயிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினார். இதனால் விவசாயிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web