நடிகை சஞ்சனா கல்ராணியை காவலில் எடுத்த போலீசார்: திடுக்கிடும் தகவல்கள் வெளிவருமா?

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.
 

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.  அவரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாகவும் இந்த விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர் என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து இன்று காலை நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற போலீசார் சோதனைக்கு பின் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த ஐந்து நாட்களில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web