நாளை முதல் தமிழகத்தில் பிரதமர் பிரச்சாரம்!பாதுகாப்புகள் தீவிரம்!

தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியா க பாஜக, பாமக கட்சிகளை வைத்துள்ளது. அதிமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டது. பாஜக தரப்பில் ஏற்றுக்கொண்டனர். மேலும் அதிமுக ஒரு மக்களவை சீட்டும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது.

bjp

இந்நிலையில் பாஜக தரப்பில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தனர். அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட, தொகுதியில் தனது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.சட்டமன்ற தமிழகம் மட்டுமன்றி மேற்கு வங்கம் ,அசாம் போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ளது.

மேலும் மேற்கு வங்கம் அசாம் போன்ற மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்திற்கு வந்து , தாராபுரத்தில் நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.முதல்வர்  பழனிசாமி ,துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் 13 வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு  தீவிரமாக ஏற்படுத்தப்படுகிறது.

From around the web