ஆகஸ்ட் மாதம் பூட்டான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூட்டான் செல்லவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பாரத பிரதமர் மோடி பூட்டான் பிரதமர் லோதே ஷெரிங்குடன் கலந்தாலோசித்து புதிய வர்த்த ஒப்பந்தகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
 

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூட்டான் செல்லவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பாரத பிரதமர் மோடி பூட்டான் பிரதமர் லோதே ஷெரிங்குடன் கலந்தாலோசித்து புதிய வர்த்த ஒப்பந்தகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி வந்துசேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆகஸ்ட் மாதம் பூட்டான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


இதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி பூட்டான் செல்லவுள்ளார். நேபாளம், பூட்டாம், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் நல்லுறவு பேண மத்திய பாஜக அரசு விரும்புகிறது.

From around the web