விளையாட்டு பொம்மைகளை அதிகம் வாங்குங்கள்: மான்கீ பாத் உரையில் பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உள்பட விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்கி அவற்றை தயாரிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது மான்கீ பாத் உரையில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம் மான்கீ பாத் உரை நிகழ்த்தி வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது: 5 மாதங்களாக நாம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். பூமியை, இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள்
 
விளையாட்டு பொம்மைகளை அதிகம் வாங்குங்கள்: மான்கீ பாத் உரையில் பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உள்பட விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்கி அவற்றை தயாரிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது மான்கீ பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம் மான்கீ பாத் உரை நிகழ்த்தி வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

5 மாதங்களாக நாம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். பூமியை, இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் பொறுமையுடன் கொரோனாவிற்கு இடையே எளிமையாக செயல்படுகிறார்கள்

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக விளையாட்டுப் பொருட்களை நாம் சொந்த நாட்டில் வாங்க வேண்டும். சில பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை. ஆந்திர பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் வாரணாசி, அசாமிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும் –

குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்

From around the web