ஜூன் 30க்கும் பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டும் இருப்பதால் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஆலோசனை செய்ய சற்று முன்னர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு
 

ஜூன் 30க்கும் பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டும் இருப்பதால் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஆலோசனை செய்ய சற்று முன்னர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு இருப்பதாகவும் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஜூன் 30 ஆம் தேதிக்கு பின்னர் ஒரு வேளை ஊரடங்கு நீடித்தாலும் இப்பொழுது உள்ள தளர்வுகளை விட இன்னும் அதிக தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தளர்வுகளை குறைக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கூறி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்து விடும் எனவும் அதன் பிறகு ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் கோடிக்கணக்கானோர் வறுமையில் வாடி வரும் நிலையில் இதற்கு மேலும் ஊரடங்கு என்றால் தாங்காது என்று பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர் ஆனால் அதே நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web