மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

 
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

தமிழகம் உள்பட 5 மாநில அளவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆலோசனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் காணொளி மூலம் இந்த ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த நிலையில் அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வந்தார்.

modi

ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து இந்த ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் விரைவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அனேகமாக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வரும் என்று கூறப்படுவதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web