சென்னை வந்தார் பிரதமர் மோடி: இன்னும் சில நிமிடங்களில் அரசு விழா தொடக்கம்!

 

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சற்று முன் சென்னை வந்தடைந்தார் 

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் வந்து அதன் பின்னர் கார் மூலம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் வர உள்ளார் 

அங்கு சுமார் 8 ஆயிரத்து 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னைக்கு வருவதை அடுத்து நேற்று பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டரில் தமிழில் ஒரு டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த டுவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான்  சென்னையில் இருப்பேன்.  நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது

modi

மேலும் இன்று பிரதமர் சென்னை வருகையை அடுத்து இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசம் என்றும் பயணிகள் யாரும் டிக்கெட் எடுக்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க தொடங்கி வைக்க உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web