சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். இதனை அடுத்து அவரது வருகை குறித்த அட்டவணை சற்று முன் வெளியாகி உள்ளது
பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வருகிறார். அவர் 10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அதன்பின்னர் பார்த்து 10.40 மணிக்கு ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருக்கும் ஹெலிபேடு வரும் பிரதமர், 11 மணிக்கு நேரு உள் விளையாட்டு மைதானம் அரங்கிற்கு சாலை மார்க்கமாக வருகிறார்
மீண்டும் அன்று மதியம் 12.30 வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பின்னர் 12 மணிக்கு மீண்டும் ஹெலிபேடு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானத்தில் கொச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2 45 மணிக்கு செல்கிறார் என அவருடைய பயணக்குறிப்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரதமரின் சென்னை வருகையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.