சீனாவின் தாக்குதலை முறியடிக்க அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அதிரடி

இந்திய எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்களும் 35 சீன வீரர்களும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு ராணுவ வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்பட உலக நாடுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு சீனா வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது இந்த நிலையில் சீனா தாக்குதல்
 

சீனாவின் தாக்குதலை முறியடிக்க அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அதிரடி

இந்திய எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்களும் 35 சீன வீரர்களும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு ராணுவ வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்பட உலக நாடுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு சீனா வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது

இந்த நிலையில் சீனா தாக்குதல் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல் முறையாக சீனப்பிரச்சினையை தீர்க்க இந்திய பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது ஆரோக்கியமான நடவடிக்கையாக அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web