பதட்டத்தோடு இருக்கும் பிளஸ் டூ மாணவர்கள்! என்ன சொல்ல போகிறார் பிரதமர் மோடி!

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்து இன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
modi

தற்போது நான் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்று கூறலாம். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் தற்போது ஜூன் மாதம் தொடங்கி இன்றளவும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். காரணம் எனில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் பொதுத் தேர்வுக்கான தேதி தள்ளிப்போனது. அதன் பின்னர் தமிழகத்தில்  நிறைய வேறுபாடு காணப்பட்டது.modi

ஏனென்றால் தமிழகத்தில் மீண்டும் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அவர்களின் உயிர் மீது அக்கறை கொண்டு தற்போது வரை தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் நடை பெறவில்லை என்றே கூறலாம். இன்று காலை அமைச்சர் இது குறித்து சில தகவல்களை கூறியுள்ளார், அதையும் நம் தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான சில விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 தற்போது இன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு தொடர்பாக இத்தகைய அவசர ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவற்றில் மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி .மேலும் நாட்டில் கல்வி அமைச்சராக உள்ள ரமேஷ் போக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இத்தகைய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் தேர்வு தொடர்பாக ஓரிருநாளில் முடிவை தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கூட்டத்தில் தேர்வு குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியாகலாம் அல்லது சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web