முதல் மார்க் எடுத்தும் தற்கொலையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்

பொதுவாக பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஒரு சோகமான நிகழ்வுகளாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்த ஒரு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் அருகே குடியாத்தம் பகுதியில் உள்ள அசோக்குமார் என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் நேற்று வெளிவந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்த்து
 

முதல் மார்க் எடுத்தும் தற்கொலையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்

பொதுவாக பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஒரு சோகமான நிகழ்வுகளாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்த ஒரு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் அருகே குடியாத்தம் பகுதியில் உள்ள அசோக்குமார் என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் நேற்று வெளிவந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் அவர் சோகமாக இருந்ததாக தெரிகிறது. இருப்பினும் அவருடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர்

இருப்பினும் நண்பர்களின் ஆறுதலில் திருப்தி அடையாத அசோக்குமார், எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லையே என்ற சோகத்தில் அருகில் உள்ள மாந்தோப்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது

போலீசார் அசோக்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அவர் படித்த பள்ளியில் உள்ள அனைவரும் அவருக்கு அஞ்சலி செய்ய வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web