இன்று பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்களிடையே பரபரப்பு

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: மார்ச், 2020 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் / ஜூன் பருவத்தேர்வுகளில்
 
இன்று பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்களிடையே பரபரப்பு

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

மார்ச்‌, 2020 இல்‌ நடைபெற்ற மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌தேர்வெழுதிய மாணாக்கர்களின்‌ தேர்வு முடிவுகள்‌ மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு மார்ச்‌ / ஜூன்‌ பருவத்தேர்வுகளில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச்‌ 2020 பருவத்தில்‌ எழுதிய மாணாக்கர்களின்‌ தேர்வு முடிவுகள்‌ ஆகியவை இன்று (16.07.2020) இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. மேலும்‌, மாணாக்கர்களின்‌ கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும்‌ அனுப்பி வைக்கப்படும்‌.

முன்னதாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் விடைத்தாள்கள் திருத்தி முடித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web