தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் முதல் மாவட்டம் எது?

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட 3.11% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்என அரசு தேர்வுகள் இயக்ககம் சற்றுமுன்னர் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49
 

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் முதல் மாவட்டம் எது?

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட 3.11% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
என அரசு தேர்வுகள் இயக்ககம்

சற்றுமுன்னர் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றதாகவும், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றதாகவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 98.10% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 97.90% பேர் தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையும் மூன்றாவது இடத்தை பிடித்த கரூர் மாவட்டத்தில் 97.51% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கடந்த 27ம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web