தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு உறுதி!மொழி பாட தேர்வானது மே 31ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தகவல்!

தமிழகத்தில் பிளஸ் 2 பாடம் தேர்வானது பொதுத்தேர்வு சொல்லி இந்த நாளில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது!
 
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு உறுதி!மொழி பாட தேர்வானது மே 31ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தகவல்!

தமிழகத்தில் எப்போதும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்தும் இன்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவில்லை. காரணம் என்னவென்றால் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்ற தகவல். அதன்படி தேர்தல் ஆறாம் தேதி நடைபெற்று முடிந்தது.மேலும்  234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

exam

மேலும் வாக்களிக்கும் போது வாக்காளர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்களுக்கு முக கவசம் சனிடைசர்  போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். மேலும் வாக்கு பதிவானது தமிழகத்தில் காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது.

ஏழு மணிக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது .தேர்தல் முடிந்த பின்னர் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்த நிலையில், சில தினங்களாக கொரோனா பரவல் காரணமாக தமிழகத்துக்கு  பொதுத்தேர்வுக்கு பற்றிய சர்ச்சைகள் கிளம்பின .ஆயினும் தற்போது அரசு தேர்வு துறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தகவலை வெளியிட்டது.

அதன்படி தமிழகத்தில் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மொழி பாட தேர்வானது மே 31ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற தேர்தல் அறிவிக்கப் பட்ட அதே நாளில் நடைபெறும் என்று அரசு தேர்வு துறை கூறியுள்ளது.

From around the web