ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி: முக்கிய அறிவிப்பு

 

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்கள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் கோவில்கள் திறக்கப்பட்டு சுவாமி வழிபாடுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த போதிலும் புனித தீர்த்தங்களில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை அடுத்து ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியுடன் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

rameswaram

இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட வேண்டும் என்றும் புனித தீர்த்தங்களில் நீராடும் போது வரிசையில் நிற்கும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

அதேபோல் புண்ணிய தீர்த்தங்களில் தண்ணீர் ஊற்றும் நபர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் 22 புனித தீர்த்தங்களிலும் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது

From around the web