சாப்பிடும் தட்டில் மொபைல் வைக்க இடம்: ஹர்பஜன்சிங் பதிவு செய்த புகைப்படம் வைரல்

சாப்பிடும்போது பெரும்பாலானவர்களுக்கு மொபைல் போனை நோண்டும் பழக்கம் இருக்கிறது இவற்றை தடுக்க பலர் அறிவுரைகள் கூறியும் ஒன்றும் வேலைக்காகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

சாப்பிடும்போது பெரும்பாலானவர்களுக்கு மொபைல் போனை நோண்டும் பழக்கம் இருக்கிறது இவற்றை தடுக்க பலர் அறிவுரைகள் கூறியும் ஒன்றும் வேலைக்காகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாக சாப்பிடும்போது சாப்பாட்டை ருசித்து சாப்பிட வேண்டும் என்றும் டிவி பார்த்துக் கொண்டோ புத்தகம் படித்து கொண்டோ மொபைல் பார்த்துக்கொண்டோ சாப்பிட கூடாது என்றும் பெரியவரகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் டிவி பார்த்துக் கொண்டுடு அல்லது மொபைல் பார்த்து கொண்டுதான் சாப்பிட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்படும் தட்டில் மொபைல் வைப்பதற்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்கும் கமெண்டும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web