நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி: உறவினர்கள் கண்ணீர்

நேற்று இரவு துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் தலைமை விமானி, துணை விமானி மற்றும் பயணிகள் உள்பட 18 பேர் பலியாகினர் என்பதும் தெரிந்ததே மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த துணை
 

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி: உறவினர்கள் கண்ணீர்

நேற்று இரவு துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் தலைமை விமானி, துணை விமானி மற்றும் பயணிகள் உள்பட 18 பேர் பலியாகினர் என்பதும் தெரிந்ததே

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த துணை விமானியான அகிலேஷ் குமார் என்பவரது மனைவி தற்போது முழு மாத கர்ப்பிணியாக இருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கும் என்று அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளார்

இன்னும் 15 நாட்களில் பிறக்கப் போகும் குழந்தையை கூட பார்க்காமல் அகிலேஷ்குமார் விபத்தில் மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர்களை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக அகிலேஷ்குமாரின் மனைவி அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை கூறப்படுகிறது

மேலும் அகிலேஷ்குமார் மிகவும் சாந்தமானவர் என்றும், அதிர்ந்து கூட பேச மாட்டார் என்றும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் என்றும் கூறிய அவரது உறவினர்கள் இப்படிப்பட்ட ஒருவருக்கா இந்த மரணம் என்றும் அதுவும் குழந்தையை கூட பார்க்க முடியாத மரணமா என்றும் தற்போது அவர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்

From around the web