அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம்: ஹெச்.ராஜா

 

தமிழக பாஜக சார்பில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் யாத்திரை தொடரும் என்றும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றும் அக்கட்சியின் பிரமுகர் ஹெச். ராஜா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அவர்களின் தலைமையில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ஒரு மாதத்திற்கு வேல் யாத்திரை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது 

இந்த நிலையில் இந்த வேல் யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி இது குறித்த வழக்கு ஒன்றின் போது தமிழக அரசு, ‘இந்த செயல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது’ என உறுதிபடக் கூறியது 

இந்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்தப்போவதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது பாஜகவின் முக்கிய பிரமுகர் ஹெச்.ராஜா இது குறித்து கூறிய போது ’தமிழக அரசின் காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும் என்றும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் 

மேலும் இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஹெச். ராஜாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web