தொலைபேசிய விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா?

 
cellphone

நோக்கியா செல்போன் தொலைபேசியை ஒருவர் திடீரென விழுங்கிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த செல்போன் நோக்கியா 3310 மாடல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செல்போன் மாடலை வைத்திருந்த கொசோவோ நாட்டின் 33 வயது நபர் ஒருவர் திடீரென அதனை விழுங்கிவிட்டார். 

இதனையடுத்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் மருத்துவரிடம் சென்று தன் செல்போனை விழுங்கியதை மறைத்து வயிற்று வலிக்கு மருத்துவம் செய்யுங்கள் என்று மட்டும் கூறி உள்ளார்.

மருந்துகள் கொடுத்தும் வயிற்றுவலி தீராததை அடுத்ஹு அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது உள்ளே அவருடைய வயிற்றில் செல்போன், பேட்டரி என தனித்தனியாக பிரிந்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இரண்டையும் வெளியே எடுத்தனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

From around the web