1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஓரே ஒரு ஆண்: திடுக்கிடும் தகவல்

ஆயிரம் ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஒரு ஆண் என்ற தகவல் திடுக்கிடும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒரு பெண் தான் மற்றொரு ஆணுக்கு காதல் வலை வீசுவார் என்பதை இதுவரை கேள்விப் பட்டிருக்கிறோம் ஆனால் ஒரு ஆண், 1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார் ரீகன் என்ற பொறியியல் பட்டதாரி கடந்த 5 ஆண்டுகளில் 1,000 ஆண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவர் ஒரு
 
1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஓரே ஒரு ஆண்: திடுக்கிடும் தகவல்

ஆயிரம் ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஒரு ஆண் என்ற தகவல் திடுக்கிடும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரு பெண் தான் மற்றொரு ஆணுக்கு காதல் வலை வீசுவார் என்பதை இதுவரை கேள்விப் பட்டிருக்கிறோம் ஆனால் ஒரு ஆண், 1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார் ரீகன் என்ற பொறியியல் பட்டதாரி கடந்த 5 ஆண்டுகளில் 1,000 ஆண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவர் ஒரு குறிப்பிட்ட சாப்ட்வேர் மூலம் பெண் குரலில் பேசி பல ஆண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது

முதலில் காதல் ரசம் சொட்ட சொட்ட ஆண்களை மயக்கி பின்னர் அவர்களிடம் ஆபாசமாக பேசி அவற்றை பதிவு செய்துகொண்டு அந்த பதிவை வைத்து அவர் மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. இதனால் பல ஆண்கள் அவரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர்

இந்த பணத்தை வைத்து ராஜ்குமார் சொகுசு வாழ்க்கையை நடத்தி உள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் சென்னையை சேர்ந்த உதயகுமார் என்பவரிடமும் இதேபோல் பெண் குரலில் பேசி பணம் கேட்டு மிரட்டிய போது உதயகுமார் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web