உலக கிரிக்கெட் இறுதிப்போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை நீக்கியது பெட்ரோல்!

பெட்ரோல்  விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி கொள்ளையே காரணம் என்று கூறியுள்ளார் பா சிதம்பரம்
 
petrol

தற்போது நம் இந்தியாவில் பெட்ரோலின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல் டீசலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது இதற்கு எதிராக பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தடுக்க முடியாததால் காணப்படுகிறது பல மாநிலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோலின் விலை ஆனது நூறு ரூபாயைக் கடந்து மக்களுக்கு பெரிதும் துன்பத்தை கொடுக்கிறது.chidampparam

இதனால் சாமானிய மக்கள் கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில விமர்சனம் செய்துள்ளார். அதன்படி இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் கொள்ளையே காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் உலக கிரிக்கெட் இறுதிப்போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்று குறையை தற்போது பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100 தாண்டியது என்றும் கூறியுள்ளார் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரை தாண்டியது ஆனாலும் பெட்ரோல் விலை 65 தாண்டவில்லை இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரி கொள்கை அல்ல கொள்ளையே காரணம் என்று என்றும் அவர் கூறினார்.

From around the web