59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னை மக்கள் அதிருப்தி!

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் மாதம் முதல் குறைந்துகொண்டே வந்தாலும் அதன் பலனை இந்தியாவில் உள்ள பொதுமக்கள் அனுபவிக்க முடியாத நிலை இருந்தது 

பெட்ரோல் டீசல் வரியை மத்திய அரசு, மாநில அரசு உயர்த்தியதால் தமிழகம் உள்பட இந்தியாவில் பெருமளவு பெட்ரோல் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்த போதிலும் பீகார் மாநிலத் தேர்தலை கணக்கில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது

crude oil

இந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதாவது 59 நாட்களுக்கு பின்னர் தற்போது பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது குறித்து கருத்து கூறிய பொதுமக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த சில நாட்களில் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web