10-ஆம் தேதி முதல் முகக் கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் கிடையாது!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் விநியோகம் இல்லை என தமிழ்நாடு பெட்ரோலிய  சங்கம் அறிவித்துள்ளது!
 
10-ஆம் தேதி முதல் முகக் கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் கிடையாது!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக வாக்குப்பதிவானது நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அவைகள் மிகவும் கண்டிப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனாநோயின் தாக்கமானது உச்சத்தில் உள்ளது. இதனால் தமிழக அரசானது சில வாரங்களுக்கு முன்பு மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு அமல்படுத்தியது.

petrol

இன்று மதியம் தமிழக அரசின் சார்பில் தொடர்புகள் மற்றும் தடைகள் கூடிய ஊரடங்கு காண கட்டுப்பாடுகள் அக்கப்பட்டுள்ளன. அதன்படி தியேட்டர்களில் 50 இருக்கை உடன் படம் பார்க்க அனுமதித்தது. கோவில் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை எனவும் தமிழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் தேதிக்கு பின்னர் கோவில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் வாங்குவது குறித்தும் பெட்ரோலிய வணிக சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி முகக் கவசம் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது எனவும் கூறியது. மேலும் இந்த திட்டமானது ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அனைவரும் முக கவசம் அணிந்து விட்டால் தான் பெட்ரோல் டீசல் விநியோகம் கிடைக்கும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்தமிழக அரசானது ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு திட்டத்தை நடை முறையில் இருக்கும் என்று அறிவித்து இருந்தது.

From around the web