ஆவடி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி!சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. பல வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை இந்த ஆண்டு அதிக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் பல கட்சிகளுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி உள்ளது. மேலும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார் .

117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தேர்தலில் கேட்ட சின்னம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இதனை எம்ஜிஆர் மக்கள் கட்சி வேட்பாளர் எம்ஜிஆர் விஸ்வநாதன் வழக்கு தொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
மேலும் அவர் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சின்னங்களை ஒதுக்குவதற்கான தேதி முடிந்தது தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஆவடி தொகுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்று திருச்சுழி தொகுதியிலும் தேர்தல் நடப்பதற்கு தடை கோரிய வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.