கமல் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு!நடந்தால் வெற்றி யாருக்கு?

கோவை தெற்கு தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
 
கமல் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு!நடந்தால் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவு பெற்றது.  பெரும்பான்மையை பிடித்து 10 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக. மேலும் திமுக கட்சி சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சில தொகுதிகள் சிறப்பான தொகுதிகள் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதிகள் என்றும் காணப்பட்டது.kamal

அதன் வரிசையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக கழக செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டிருந்தார்  மேலும் அவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வை எதிர்த்து அத்தொகுதியில் களமிறங்கியுள்ளார். சில  ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அத்தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார். மேலும் அதனை தொடர்ந்து உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே கமலஹாசன் ஆதிக்கம் அத்தொகுதியில் காணப்பட்டது.

இந்நிலையில் அத்தொகுதியில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த என்று உயர்நீதிமன்றத்தில் மனு என்ற தகவல் வெளியாகியது. மேலும் கோவை தெற்கு தொகுதிக்கு மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை சுயேச்சையாக போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென்மண்டல தலைவர் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் அவர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 73 வாக்குகள் மட்டுமே பெற்றதால் இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென்மண்டல தலைவரான ராகுல் காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

From around the web