ஊரடங்கும் வேண்டாம் ரத்து செய்ய வேண்டும் ஐகோர்ட் கிளையில்  மனு!

இரவு நேரம் மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளையில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
 
ஊரடங்கும் வேண்டாம் ரத்து செய்ய வேண்டும் ஐகோர்ட் கிளையில் மனு!

தற்போது நாடெங்கும் அதிகம் பேசப்படும் வார்த்தையாக கொரோனா உள்ளது. காரணம் மனிதனின் வாழ்க்கையை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது மேலும் வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களின் முடிவையும் மரணத்திற்கு கொண்டு செல்கிறது .மேலும் பல பகுதிகளில் கொரோனா நோய்க்கு எதிராக மக்கள் அனைவரும் வேதனையோடு போராடி வருகின்றனர். பல மாநில அரசுகளும் இதற்கு எதிராக பல்வேறு திட்டங்களையும் தடைகளையும் உத்தரவுகளையும் சிறப்பித்து வருகின்றனர். ஆயினும் இந்த நோயினை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம்.lockdown

கொரோனா நோய் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. தமிழகத்தில்  தினசரி இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுநேரம் ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது .இதனால் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் மக்களை பாதுகாக்கலாம் என்றும் பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு இதுபோன்ற ஊரடங்கு அமல் படுத்துகின்றனர்.

ஆனால் இத்தகைய ஊரடங்கு அமல் படுத்தினாலும் கொரோனா காட்டுத்தீயாக பரவி வருகிறது.  தமிழகத்தில் உள்ள ஊரடங்கு ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .அதன்படி தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுபோன்று ஊடகங்களுக்கான எதிர்ப்பலைகள் பல மாவட்டங்களிலும் அதிகமாக நிலவுகிறது.

From around the web