3வது திருமணம் செய்த வனிதா: அடுத்த நாளே போலீஸில் புகார் என்பதால் பரபரப்பு

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கி ஒரு நாள் கூட இன்னும் முடியாத நிலையில் திடீரென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் என்பவர் தனக்கு விவாகரத்து கொடுக்கும் முன்னரே வனிதாவை தனது கணவர் பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை வடபழனி காவல் நிலையத்தில்
 

3வது திருமணம் செய்த வனிதா: அடுத்த நாளே போலீஸில் புகார் என்பதால் பரபரப்பு

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கி ஒரு நாள் கூட இன்னும் முடியாத நிலையில் திடீரென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் என்பவர் தனக்கு விவாகரத்து கொடுக்கும் முன்னரே வனிதாவை தனது கணவர் பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

பீட்டர் பால் மற்றும் ஹெலன் ஆகிய இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 7 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்

இந்த நிலையில் வனிதாவை திருமணம் செய்யப்போவதாகவும் ஆனால் தனக்கு விவாகரத்து கொடுத்த பின்னரே திருமணம் நடைபெறும் என்றும் ஹெலனிடம் பீட்டர்பால் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது

ஆனால் தற்போது விவாகரத்து நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனை அடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெலன் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web