சிறுபான்மையின நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்!!

காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
peter alphonse

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அவரது கட்சி மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகள் பலரும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பயனடையும் வண்ணம் ஆக மக்கள் சேவை ஆற்ற அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளனர்.stalin

அவர்கள் பலரும் அந்தத் துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர்.  தற்போது தமிழகத்தின் சிறுபான்மை நல ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான ஒருவரை நியமித்து தாக கூறப்படுகிறது. அதன்படி தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியில் பீட்டர் அல்போன்ஸ் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தி அமைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இத்தகைய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த பீட்டர் அல்போன்ஸ் தென்காசியில் எம்எல்ஏவாக 1989 மற்றும் 1991-ம் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடையநல்லூர் பகுதியில் எம்எல்ஏவாக 2006ஆம் ஆண்டு தேர்வானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் அவர் தன் கட்சி மட்டுமன்றி கூட்டணி கட்சிக்கு முக்கியத்துவம் வழங்கி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

From around the web