அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: எந்த மாநிலத்தில் தெரியுமா?

 

கொரனோ வைரஸ் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் திரையரங்குகள் திறப்பதற்காக மத்திய அரசு சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தியது. இதனை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது 

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு வெளிவரும் முன்னரே மேற்கு வங்க மாநிலத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்''

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதி அளித்த முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க திரையரங்க உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தை அடுத்து மேலும் சில மாநிலங்களில் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது

தமிழகத்தில் திரையரங்குகளில் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web