நிரந்தரமாகவே வொர்க் ஃப்ரம் ஹோம்: ஐடி ஊழியர்களுக்கு வரமா? சாபமா?

 
நிரந்தரமாகவே வொர்க் ஃப்ரம் ஹோம்: ஐடி ஊழியர்களுக்கு வரமா? சாபமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து வரும் நிலையில் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தளர்வுகளுக்கு தொழில்நுட்பத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதுகுறித்து தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் அவர்கள் கூறுகையில் ’வீட்டிலிருந்து பணி செய்வதற்கு தேவைப்படும் பல்வேறு அனுமதிகள் மற்றும் செயல் முறைகளை அரசு நீக்கிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.  எனவே வீட்டில் இருந்து பணி பணி செய்து கொண்டு இனிமேல் எளிதாகிவிடும் மத்திய அரசின் இந்த விதிமுறை தளர்வு காரணமாக நோய்த் தொற்று முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணிபுரிய அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செலவு மற்றும் போக்குவரத்து அலைச்சல் குறையும் என்பதும் ஊழியர்கள் பணி எளிதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் வீட்டில் இருந்தே பணி செய்வது ஊழியர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டாக நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக பணிபுரியும் வாய்ப்பு மிஸ் ஆகும் என்றும் குடும்பத்துடன் 24 மணி நேரமும் இருப்பதால் சண்டை சச்சரவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

எனவே ஐடி ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி செய்யும் முறை அமலுக்கு வந்தால் அது ஊழியர்களுக்கு வரமா சாபமா என்ற கேள்வி தற்போது எழுகிறது

From around the web