தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிரும் அறிவிப்புகள் வரும்: முதல்வர் பழனிசாமி

தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிரும் அறிவிப்புகள் இன்னும் பல வெளியிடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டமன்றத்தின் காலம் முடிவடைந்ததால் ஏப்ரல் இறுதி வாரம் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி வருகின்றன என்பதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. போராட்டம் செய்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து, பயிர்க்கடன்கள் ரத்து உள்பட பல அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் மக்களின் மனம் குளிரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே மகளிர் சுய உதவி குழுவின் கடன் உள்பட பல கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இலவச அறிவிப்புகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியத்துடன் கடன், பலவிதமான இலவச பொருள்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வரும் தேர்தலை கணக்கை கொண்டு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இலவச அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது