கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை!!

கொரோனா தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை
 
covid 19

தற்போது நம் இந்தியாவில் அதிகமாக பேசப்படுகின்ற வார்த்தையாக கொரோனா  உள்ளது. எங்கு சென்றாலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சில தினங்களாக கொரோனாவின் தாக்கமானது குறைந்து கொண்டே வருகிறது. மேலும் நம் தமிழகத்திலும் இந்த நோயின் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் பல பகுதிகளில் கொரோனா  தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக ஏற்படுகிறது.corona

இந்நிலையில் தற்போது தடுப்பூசி குறித்து மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைகள் கூறியுள்ளது. அதன்படி கொரோனா  ஏற்பட்டு அந்த தொற்றிலிருந்து குணமடைந்த அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்று கூறுகின்றனர். மேலும் குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி பலன் தருவதை உறுதி செய்தபின் தடுப்பூசி போடலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்யத் தேவை உள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளவருக்கு தடுப்பூசி போடுவதே முதன்மைப் பணியாக வேண்டுமென்றும் கூறுகின்றனர். கொரோனா  தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களில் தடுப்பு செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். டெல்டா வகை தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் இரண்டாவது டோஸ்க்கான அவகாசத்தை குறைக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

From around the web