சென்னைக்கு திரும்ப விரும்பும் மற்ற மாவட்ட பொது மக்கள்: பரபரப்பு தகவல்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்ததால் சென்னையை விட்டு தப்பித்தால் போதும் என்ற நிலையில் மற்ற மாவட்டத்து மக்கள் சென்றனர் இபாஸ் கூட இல்லாமல் பலர் சொந்த மாவட்டத்துக்கு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சொந்த ஊர் சென்ற பலர் வேலையின்றி வருமானமின்றி தவிப்பதாகவும் சென்னையில் தான் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் அவர்கள் தற்போது புரிந்துள்ளனர் மேலும் சென்னை சென்றால் மட்டுமே கைநிறைய சம்பாதிக்க முடியும்
 

சென்னைக்கு திரும்ப விரும்பும் மற்ற மாவட்ட பொது மக்கள்: பரபரப்பு தகவல்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்ததால் சென்னையை விட்டு தப்பித்தால் போதும் என்ற நிலையில் மற்ற மாவட்டத்து மக்கள் சென்றனர் இபாஸ் கூட இல்லாமல் பலர் சொந்த மாவட்டத்துக்கு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சொந்த ஊர் சென்ற பலர் வேலையின்றி வருமானமின்றி தவிப்பதாகவும் சென்னையில் தான் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் அவர்கள் தற்போது புரிந்துள்ளனர்

மேலும் சென்னை சென்றால் மட்டுமே கைநிறைய சம்பாதிக்க முடியும் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும் என்பதற்காக மீண்டும் சென்னை வருவதற்கு அவர்கள் தற்போது முயற்சித்து வருகின்றனர்

தற்போது இபாஸ் கெடுபிடிகள் சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் சென்னைக்கே குடும்பத்தோடு வர பலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. தற்போது ஏழு மண்டலங்களில் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாகவும் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதி கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அண்ணா நகர் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 3 கட்டுப்பாட்டு மையங்கள், கோடம்பாக்கம் அம்பத்தூர் மண்டலங்களில் இரண்டு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் மற்ற மாவட்டத்தில் இருந்து சென்னை திரும்பும் பொது மக்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web