குண்டர்கள் ஆட்சி நடத்தவா மக்கள் வாக்களித்தார்கள்: கமல் ஆவேசம்


 

 

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று உத்தரபிரதேச மாநில போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டரில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் 

ராகுல் காந்தியிடம் உத்தரப் பிரதேச மாநில போலீசார் நடந்து கொண்ட விதம் வெட்கக் கேடானது என்றும் குண்டர்கள் ஆட்சி நடத்தவ மக்கள் வாக்களித்தார்கள்? என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.  பெரும்பான்மையினர் இப்படி நடந்து கொண்டால் அவர்கள் மீது வெறுப்புதான் மக்களுக்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறியதாவது: உ.பி.யில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம். காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

From around the web