மக்கள் இனிதான் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்.. பிரதமர் மோடி பேச்சு!!

இந்தியாவில் ஊரடங்கானது மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 வரை பிறப்பிக்கப்பட்டு இருந்தது, தற்போது மக்களின் பொருளாதார நிலையினையும் நாட்டின் பொருளாதார நிலையினையும் கருத்தில் கொண்டு ஊரடங்கானது தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியினையே கண்டுவருகிறோம், அனைவரும் மிகவும் ஒற்றுமையாக அரசாங்கத்திற்கு ஒத்துழைத்ததால் நாம் சிறப்பான
 
மக்கள் இனிதான் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்.. பிரதமர் மோடி பேச்சு!!

இந்தியாவில் ஊரடங்கானது மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 வரை பிறப்பிக்கப்பட்டு இருந்தது, தற்போது மக்களின் பொருளாதார நிலையினையும் நாட்டின் பொருளாதார நிலையினையும் கருத்தில் கொண்டு ஊரடங்கானது தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மான் கி பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியினையே கண்டுவருகிறோம், அனைவரும் மிகவும் ஒற்றுமையாக அரசாங்கத்திற்கு ஒத்துழைத்ததால் நாம் சிறப்பான முன்னேற்றம் கண்டுவருகிறோம்.

மக்கள் இனிதான் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்.. பிரதமர் மோடி பேச்சு!!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என உலக நாடுகள் எண்ணி இருந்தநிலையில், நாம் செய்து காட்டி இருக்கிறோம்.

பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் உதவ நினைத்து ஆயுஷ்மான் திட்டத்தின்மூலம் தொடர் உதவிகளைச் செய்து வருகின்றது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டு விடக்கூடாது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் முழுமையான வெற்றியினை அடைவோம், மேலும் மத்தியர் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அனைத்துவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web