மக்கள் எதிர்ப்பு! இயந்திரக் கோளாறு!! ஆயினும் மீண்டும் ஸ்டெர்லைட் இயக்கம்!!!

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
மக்கள் எதிர்ப்பு! இயந்திரக் கோளாறு!! ஆயினும் மீண்டும் ஸ்டெர்லைட் இயக்கம்!!!

தமிழகத்தில் முத்து நகரமாக காணப்படுவது தூத்துக்குடி மாநகரம். தூத்துக்குடி மாநகரில் அதிக முத்துக் குளிப்பவர்கள் இருக்கிறார்கள். மேலும் இங்கு அதிக அளவு உப்பு தயாரிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் தயாரிக்கப்படும் உப்பானது வட இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இன்று மீன்பிடி தொழிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இத்தகைய  தூத்துக்குடி மாநகரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்திற்கு ஆளாக்கியது.sterlite

காரணம் என்னவெனில் இங்கு இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் போராட்டம் நடைபெற்றது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் அப்பாவி மக்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மிகுந்த வேதனை அளித்தது. இதனால் தமிழகமே இதற்கு எதிராக குரல் கொடுத்து போராடியது. மேலும் இதன் விளைவாக சில வருடங்களாக இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்துள்ளது.

அதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர் காரணம் என்னவெனில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய முந்தைய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது அதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக திறக்க அனுமதிக்க சம்மதித்தது. இந்த சூழலில் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யத் தொடங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிசன் கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பணி நிறுத்தப்பட்டது.

 தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆக்சிசன் கலனில்  ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆக்சிசன் கலனில்  ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இஸ்ரோ வல்லுநர்கள் உதவியுடன் சரி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆலையில் ஆக்சிசன் குளிர்விக்கும் கலனில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட கோளாறால் உற்பத்தி தடை பட்டது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய தடைகளை மீறி மக்களின் எதிர்ப்பினை தாண்டியும் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

From around the web