மக்களே ஹேப்பி நியூஸ்! 20 நாளாக கொரோனா குறைவு! குணமடைவோர் அதிகம்!

இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது!
 
corona

தற்போது ராம்நாத் நாட்டில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா  பேச்சு உள்ளது. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு இந்த நோயானது இந்தியாவில் பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் இந்த நோயின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இதன் விளைவாக தற்போது கொரோனா  குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்டங்களும் தடுப்பூசிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.corona

இதன் விளைவாக இந்தியாவில் சில தினங்களாக கொரோனா  குறைந்து வருகின்ற செய்தி அனைவருக்கும் கேட்கப்பட்டது. ஆனால் தமிழகத்திலோ எதிர்மறையாக உள்ளது. கொரோனா  இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவின் பாதிப்பு ஏற்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு சில தகவல்களை கூறியுள்ளது. இத்தகவல்  மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனா  குறைந்து வருவதாக மத்திய அரசு தகவல் கூறியுள்ளது.

மேலும் புதிதாக இந்த கொரோனா  நோய்க்கு ஆளாக வரை விட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இதனை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் அகர்வால் கூறியுள்ளார். அதன்படி பரிசோதிக்கப்படும் தொற்று உள்ளவர்கள் விகிதம் 9.79 சதவீதமாக கொரோனா  குறைந்துள்ளதாக லால் அகர்வால் பேட்டி அளித்துள்ளார். மேலும் மே 17ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இந்த நோயின் இரண்டாம் அலை தாக்குதல் குறையத் தொடங்கியுள்ளது என அகர்வால் தகவல் அளித்துள்ளார்.

From around the web