மக்களே இப்படி செய்யாதீர்கள்! மாயமான கொரோனா நோயாளி  தூக்கிட்டு தற்கொலை!!

அந்தியூரில் இருந்து கொரோனா நோயாளி தப்பித்து தூக்கிட்டு தற்கொலை!
 
suicide

தற்போது நாடெங்கும் கொரோனாவின் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் மக்கள் அனைவரும் சுவாசிப்பதற்கு கூட மிகவும் தயங்குகின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் அதிகமாக விற்பனை செய்யும் பொருள் என்றால் அதனை முக கவசம் என்றே கூறலாம். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தற்போது முகத்தை மூடிக் கொண்டே வெளியே செல்கின்றனர். மேலும் பல மாநில அரசும் இதனையே பின்பற்ற மக்களிடம் அறிவுறுத்துகிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பினும் இந்த கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையவே இல்லை என்றே கூறலாம்.corona

அதுவும் குறிப்பாக தமிழகம் கர்நாடகா புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா நோய்க்கு மிகவும் பயப்படுகின்றனர். மேலும் பலரும் இந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள மிகவும் தயங்குகின்றனர். மேலும் இந்த கொரோனா நோய் கண்டறியப்பட்டால் அவர்கள் பலரும் தலைமறைவாகி கின்றனர்.

 தலைமறைவான கொரோனா நோயாளி தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிகமாக பரவுகிறது. அதன்படி தமிழகத்தில் அந்தியூரில் சிகிச்சை மையத்தில் இருந்து மாயமான கொரோனாநோயாளி தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் நாடெங்கும் பரவுகிறது. மேலும் அவர் பரமேஸ்வரன் என்றும் அவருக்கு 55 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அந்தியூர் அருகே உள்ள சேத்தநாயக்கனுரை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனா நோய் உறுதியாகி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த மையத்தில் இருந்து தப்பித்து தற்போது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பரமேஸ்வரன்.

From around the web