மக்கள் முழுமையாக நம்பவில்லை! காரசார வாதம் !"உச்சநீதிமன்றத்தில்"

மக்கள் இன்னும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக நம்பவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதிடப்படுகிறது!
 
மக்கள் முழுமையாக நம்பவில்லை! காரசார வாதம் !"உச்சநீதிமன்றத்தில்"

 தமிழகத்தில் முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது தூத்துக்குடி மாநகரம். தூத்துக்குடி மாநகரம் ஆனது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்பாக பிரித்து தனி மாவட்டமாக இருந்தது. மேலும் இந்த தூத்துக்குடி ஆனது அதிக முத்துக்குளிக்கும் தொழிலாளர்களை வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்றுள்ள தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று உள்ளது.

tamilnadu

அதற்கு எதிராக சில வருடங்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மட்டுமின்றி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இத்தகைய ஸ்டெர்லைட் ஆலை ஆனது தற்போது வரை மூடப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா நிறுவனம்  ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய  அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளது இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில் மிகவும்  அதிகரித்தது. தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  மேலும் ஆலையை திறந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்றுதமிழக அரசு தரப்பு வாதம் கூறுகிறது.மேலும் ஆக்சிஜன் உற்பத்தி தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியது அந்த ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் ஆன வேதாந்தா நிறுவனம். ஸ்டெர்லைட் க்கு பதில் நாட்டில் மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிசன் உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என்று தமிழகத்தின் சார்பில் கூறப்படுகிறது. தமிழக அரசே ஆலையை  நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாங்களே திறக்கலாம் என்றாலும் கூட அந்த பகுதியில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் மக்கள் இன்னும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக நம்பவில்லை எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார் வேதாந்தா  நிறுவனம்  தொடர்ந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை ஒத்திவைத்துள்ளது. மேலும் வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

From around the web