வேட்பாளருக்கு வெற்றிலை மாலை அணிவித்து மக்கள் உற்சாகம்!

வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் சரவணகுமார் வாக்குறுதி!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகள் பல்வேறு கட்சியுடன் கூட்டணி உள்ளன. ஆளும் கட்சி அதிமுக கூட்டணி கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சியினை வைத்துள்ளது. மேலும் இதற்கு வலுவாக எதிர்க்கட்சியான திமுக  கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரு கூட்டணி

dmk

இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் நாம் தமிழர் கட்சியில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ந இந்நிலையில் திமுக வானது தனது வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்.மேலும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கே எஸ் சரவணகுமார் போட்டியிடுகிறார் எனவும் அறிவித்திருந்தது.

சரவணகுமார் பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஜெயமங்கலம், வடுகப்பட்டி போன்ற கிராமங்களில் கூட்டணி கட்சியின் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மக்கள் வெற்றிலை மாலையை அளித்தனர். மேலும் அப்பகுதியில் வெற்றிலை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால்   ஜெய மங்கலம் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கூறினார். மேலும் அங்குள்ள மக்களிடமும் சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டுகிறார்.

From around the web