மக்களே எச்சரிக்கை: இன்னும் ஒரு நாளைக்குள்ள புயல் உருவாகப் போகிறது!

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
 
மக்களே எச்சரிக்கை: இன்னும் ஒரு நாளைக்குள்ள புயல் உருவாகப் போகிறது!

தற்போது கோடைக்காலம் நிலவுகிறது. இதனால் பகலில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கூட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மையமாக உருமாறியது என்று கூறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதனைத் தொடர்ந்து மேலும் 12 மணி நேரத்தில் அது புயலாக மாறும் என்றும் கூறியுள்ளது.rain

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதன் வரிசையில் நீலகிரி, கோவை, தேனி ,திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதை தொடர்ந்து கன்னியாகுமரி ,தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் திருப்பூர் நாமக்கல் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து மே 15ம் தேதியில் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மே 15 கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மே 16 17ம் தேதியில் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் மே18 நீலகிரி தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

From around the web