மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களிக்கின்றனர்! திமுக தலைவர் மு க ஸ்டாலின்!

வாக்களித்த பின் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களிக்கின்றனர் என பேட்டி அளித்தார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று தொடங்கியது காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.இந்த 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மேலும் வாக்காளர் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

vote

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல கூட்டணிக் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக  காங்கிரஸ் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் க்கப்பட்டார். அவர் காலையில் தனது  வாக்கை பதிவிட்டு பின்னர்  பேட்டியளித்தார்.

அப்பொழுது தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் வாக்களிப்பதாக திமுக தலைவர் கூறினார். மேலும்  மே 2ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எழுச்சியுடன் மக்கள் வாக்களிப்பதை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே காண முடிகிறது எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

From around the web