மக்கள் மகிழ்ச்சி! 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்!
 

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மே மாதம் மட்டும் தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் இருப்பது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஆனது வெகுவாக அதிகரித்து உள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் தலைவிரித்தாடுகிறது.இதனால் மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.

weather

தற்போது வானிலை ஆய்வு மையமானது மகிழ்ச்சி கலந்த சோகமான செய்தியைக் கூறியது. மகிழ்ச்சியானது தென் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியாகவும், வட  மாவட்ட மக்களுக்கு சோகமாகவும் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டமாக உள்ள கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று முதல் 24ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் காற்றின் வேகம்  பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web