தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முதலிடத்தில் உள்ளது பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி புத்தன் அணையில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது!
 
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முதலிடத்தில் உள்ளது பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி!

தமிழகத்தில் சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. மேலும் மக்கள் அனைவரும் கோடைக்காலம் தொடங்கியதாக எண்ணி மிகுந்த அச்சத்தில் உள்ளனர் .காரணம் என்னவெனில் கோடைக்காலம் தொடங்கினால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நினைக்க முடியாத அளவிற்கு அதிகமாக காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் குடி நீரின் அளவானது வற்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். இதனால் மக்கள் அச்சத்தோடு இந்த கோடை காலத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

rain

கோடைகாலம் தொடங்கியதும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும். அதனை போல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்து கோடையின் வெப்பமானது குறைந்து நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏழு சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது. இந்த ஏழு சென்டிமீட்டர் மழையானது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணையில் பதிவாகி உள்ளது. மேலும் நாமக்கல் ஈரோடு சிற்றார் பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

எடப்பாடி பல்லடம் கோத்தகிரி  போன்ற பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மேலும் அவினாசி ஓமலூர் குமாரபாளையம் அன்னூர் சங்ககிரி கயத்தாறு ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சேந்தமங்கலம் நடுவட்டம் மேட்டுப் பாளையம் திருப்பூர் ஒகேனக்கல் பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மேலும் தற்போது பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஆனது வெகுவாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web