பேடிஎம் மூலம் பேருந்து டிக்கெட் கட்டணங்களை செலுத்தும் முறை..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியான நிலையில் போக்குவரத்து சேவை குறித்த விஷயங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “தற்போதைக்கு எடுத்துள்ள முடிவுகளின்படி பேருந்து சேவையானது காலை 6
 
பேடிஎம் மூலம் பேருந்து டிக்கெட் கட்டணங்களை செலுத்தும் முறை..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற  மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியான நிலையில் போக்குவரத்து சேவை குறித்த விஷயங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பேடிஎம் மூலம் பேருந்து டிக்கெட் கட்டணங்களை செலுத்தும் முறை..!!

அவர் கூறும்போது, “தற்போதைக்கு எடுத்துள்ள முடிவுகளின்படி பேருந்து சேவையானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். மேலும் அதன்பின்னர் கொரோனாவின் பாதிப்பு குறித்த முடிவுகள் அடிப்படையில் படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகரிப்போம்.

மேலும் பேருந்து கட்டணம் உயர்த்தபடும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகின்றது. அப்படி எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படவில்லை. பேருந்துகளுக்கு நீங்கள் வழக்கமான கட்டணங்களை செலுத்தினால் போதுமானது.

மேலும் கையுறை அணிந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதும், பணம் வாங்குவதும் கடினமானதாக இருப்பதாக அரசு பேருந்து ஊழியர்கள் கூறியுள்ளமையால், தற்போதைக்கு 2 அரசு பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை வெற்றிபெற்ற பின்னர் அது அதிக அளவிலான பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

From around the web