நோயாளிகளே உஷார்! வெளியே சுத்துனா பிடித்திடுவோம்! "2000 அபராதம்"

கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால்  2000 ரூபாய் அபராதம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்!
 
நோயாளிகளே உஷார்! வெளியே சுத்துனா பிடித்திடுவோம்! "2000 அபராதம்"

நாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் வார்த்தையாக தற்போது உருவெடுத்துள்ளது ஆட்கொல்லி நோயான கொரோனா. கொரோனா நோய்க்கு எதிராக நாட்டு மக்கள் மற்றும் மத்திய அரசும் போராடி வருகின்றனர். மேலும் மாநில அரசின் சார்பில் தங்களது மாநிலங்களில் பல்வேறு உத்தரவுகளையும் தடைகளை விதித்துள்ளன. மேலும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இதனால் பல மாநிலங்களில் தற்போது இந்த கொரோனா நோயின் தாக்கம் குறைந்துள்ளது.corona

 இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளன. அதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மேலும் ஒரு சிலர் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மாநகராட்சி ஆணையர் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் .அதன்படி விட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் வெளியே சுற்றித் இருந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இரண்டாவது முறை வெளியே சுற்றினால் கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் நோயாளிகள் வெளியே நடமாடினால் 044-25 38 45 20 என்ற நம்பர் போன் பண்ணி புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

From around the web